Monday, June 22, 2020

Sangita Sagara Samrajya Santhanam


சங்கீத சாகர சாம்ராஜ்ய சந்தானம் 



மகான் இராகவேந்திரர் வான மார்கமாக வந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியுசிக் அகாடமி ஹாலில் இறங்கினார்.
அவரை பற்றி பாடும் போது அவர் பகதர்களுக்கெல்லாம் அருள்பாலிக்க வேண்டும் என்று வந்திருந்தார்.  அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது.

ஒரு பெரிய ஆசனத்தில் இராமர் வில் அம்புகளுடன் , இரண்டு பக்கத்திலும் திருவையாறு தியாகய்யரும், அருணாசல கவிராயரும் அமர்ந்திருந்தனர்.  கவிராயர் மடியில் திருவரங்கன் வேறு படுத்துக் கொண்டு இருக்கிறார்.

இன்னொரு பக்கம் பார்த்தால் கண்ணன் புல்லாங்குழல் கொண்டு ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யருக்கு ஏதோ வாசித்து காண்பித்தபடி ஒரு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊஞ்சலை இராதையும் ருக்மினியும் கோபிகைகளுடன் ஆட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு ஆசனத்தில் திருவானைகாலிலிருந்து அகிலாண்டேஸ்வரி தன் மகன் திருத்தனியிலிருந்து வந்திருக்கும் திருக்குமரனை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இவர்கள் இருவருக்கும் முத்துசுவாமி தீக்ஷ்தர் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்.

அதே சமயம் அங்கே காஞ்சி முனிவர் சங்கராச்சாரியார் காஞ்சி காமாட்சி காலடியில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.

மகான் மந்திராலயத்திலிருந்து ஆழ்வார்பேட்டை வரை வந்துவிட்டோம் அப்படியே மயிலாப்பூர் சென்று கற்பகாம்பாளை ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைக்கும் போது அகாடமிக்கே மயிலாகவே தன் பக்தன் பாபநாசம் சிவனுடன் வந்து இறங்குகிறாள் கற்பகாம்பாள்.

இந்த தெய்வங்களையெல்லாம் ஒரு சேர கண்ட களிப்பில் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தார் நமது மீசைக் கவி சுப்ரமணிய பாரதி. அவரை ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்தனர் கோபால கிருஷ்ண பாரதியாரும் கவியோகி சுத்தானந்த பாரதியாரும்.

எல்லா கச்சேரியும் போலவே நமது தொந்தி கணபதி  முதலாக கச்சேரி ஹாலிற்குள் செல்ல சுவாமி தயானந்த சரஸ்வதிகளை தம்மோடு வரும்படி அழைத்தார். சுவாமிகளும் கைலாசத்திலிருந்து வந்திருந்த சிவப்பெருமானிடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றார்.
“மஹாகணபதிம் மனசாஸ்மராமி “ என்று ஒரு கம்பீர காந்தர்வ குரல் ஒலிக்க ஆரம்பித்தது. https://www.youtube.com/watch?v=rsEYEyHMZzo

மெட்றாஸ் சங்கீத ரசிகர்களும் கதீட்ரல் சாலையையும், மெளபரிஸ் சாலையையும் , கோபாலபுர சாலைகளிலும் சுற்று வட்டார திருவல்லிக்கேணி. மயிலாப்பூர், மாம்பல வாசிகளும் கால் நடையாகவே வந்து ஆக்கிரமித்திருந்தனர். அவர்களுக்காகவும் வெளியிலும் திரைகள் வைத்திருந்தனர்.

பிள்ளையார் அங்கு மெய் மறந்த நிலையில் இருந்த அனைத்து ரசிக மனங்களிலும் சங்கீததிற்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தார்.

அது முடிந்ததும் தன் இரசிகர்களின் மனநிலைய நோட்டம் விட்ட சங்கீத கலாநிதி “அகிலாண்டேஸ்வரி ரகஷமாம் ”  https://www.youtube.com/watch?v=lNFRr5R-dUAஎன்றவுடன் அன்னை மகனுடனும் தீட்சிதருடனும் எழுந்தருளினார். முத்துசாமி தீக்ஷிதர் தானே அந்த பாடகருக்குள் சென்று அதே பாவனையில் பாடுவதை உணர்ந்தார். அன்னை பாடிக் கொண்டிருக்கும் போதே அன்னை மடியில் அழகனை கண்டு பரவசமாகி “ஸ்ரீ  வல்லி தேவ சேனாபதே “ https://www.youtube.com/watch?v=voQvpxTclnI என்று ரசிகர்களை பரவசத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

வெளியே இராமபிரான் தன் இருக்கையிலிருந்து எழுந்தார் , அருணாசல  கவிராயர் வரச் சொன்னார். கவிராயர் உடன் உறங்கும் அரங்கனை எழும்படி வேண்டினார்.  இதனை கண்ட தியாகய்யரும் எழுந்தார்.  இராமர்                         “ தியாகராஜா ! நமது பக்தன் நம்மைக் காட்டிலும் ரசிகர்களின் அடிமை, முன்று சமஸ்கிருத பாடல்கள் பாடிவிட்டதால் அடுத்து சமஸ்கிருதம் தெரியாத ரசிகர்களுக்காக தமிழ் பாட்டு தான் பாடுவான், அதனால் நான் அருணாசலத்துடன் சென்று வருகிறேன் “ என்று கூறிச் சென்றார்.

 பகவான் கிருஷ்ணர் தியாகராஜ சுவாமிகளை தடுத்து “இன்றாவது என்னுடன் வாருங்களேன் , எப்போதும் அந்த இராமனுடன் தான் சென்றுவிடுகிறீர்களே.  ருக்மணியும் அவளை பற்றி நீங்கள் பாடுவதை கேட்க வந்திருக்கிறாள்  “ என்று வழக்கம் போல் வம்புக்கிழுத்தான்.

உள்ளே மேடையில்  “ தன்னன்னா” என்று ரசிக ரஞ்சனர் “மோகன”த்தில் ஆலாபனை செய்ய தொடங்கி ஒரு நீண்ட ராக , தானம், பல்லவி பாடி “ஏன் பள்ளிக் கொண்டீர் அய்யா “ என்று அரங்கனை வணங்கி இராமாயணத்தை பாடலில் வர்ணித்தார்.    https://www.youtube.com/watch?v=cyjkPjzGGuU

அரங்கனும் அரங்கமும் அப்படியே சொக்கிப் போய் மெய்மறக்கும் வேளையில் , வேணுகோபாலர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே ருக்மணியுடன் மிக மெதுவாக ஆடத்துவங்கினார் “கானமூர்த்தே” என்று தியாகராஜர் அந்த பாடகரின் ஜீவ நாடியில் புகுந்து மெய் சிலிர்க்க வைத்தார்.  https://www.youtube.com/watch?v=9n4HFnOoYfE
அகாடமி உள்ளும் புறமும் நிசப்தத்தில் நின்றது. அந்த கோபாலனை புறத்தில் தூற்றினாலும் அகத்தில் தினமும் வணங்கும் போலி நாத்திகரும் மாறு வேடத்தில் வந்ததை அந்த மாய கருணாமூர்த்தி கவனிக்க தவறவில்லை.

இரசிகர்கள் மேலும் கிருஷ்ணத்தில் தோய அவர்களின் மனம் “அலைபாயுதே” என்று ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர் அழைத்தவுடன் அங்கிருந்த அனைவரின் மனமும் ஆர்பரித்தது. கரவொலி அடங்கவே பல நிமிடங்கள் பிடித்தது.   https://www.youtube.com/watch?v=KKAVDdL3E_I

குரு ராகவேந்திரர் பல தெய்வ ரூபங்களை  ஒரு சேரக் கண்ட பரவசத்தில் தனது மற்றுமொறு பக்தனின் மனதில் சென்று அந்த “ஏகாந்த”த்தை விரும்பும் விஐபியையும் அவர் வீட்டிலிருந்து மாறு வேடத்தில் நடந்தே வரச் செய்து (அவரால் வேறு அங்கு மேலும் கூட்டம் கூடாமலிருக்க ) ஒரு துண்டு சீட்டில் “துங்கா தீர விராஜம் பஜ மன” என்று எழுதி அந்த பாடகருக்கு கொடுத்தனுப்பினார். 
https://www.youtube.com/watch?v=r8T3tyQt07A
உடனே அந்த பாடகரும் பிருந்தாவன துளசி வாசனையை உணர்ந்தார் , அப்படியே தன் ரசிகர்கள் அனைவருக்கும் பம்பாய் மெயிலில் டிக்கெட் புக் செய்து மந்திராலயம் ரோட் ஸ்டேஷனில் இறக்கி துங்கா நதிக்கரையில் குளிக்க வைத்து மகானின் சந்நிதானத்தில் நிறுத்தினார். “ராகவேந்திரா !! ராகவேந்திரா !!!” என்று உச்ச ஸ்தாயியில் அழைத்தவுடன் ராகவேந்திரர் துங்கை நீரில் முக்கிய துளசியினால் அனைவருக்கும் நீர் தெளித்து ஆசீரவதித்தார். ஏற்கனவே காவிரி நீரில் அனைவரையும் அரங்கநாதர் நனைத்திருந்தால் அனைவரும் குளிரில் நடுக்கினர்.

மீண்டும் எல்லோருக்கும் ரீட்டன் டிக்கெட் எடுத்து மயிலாப்பூர் அழைத்து வந்து  “கற்பகமே” என்று பாபனாசம் சிவனாக பாடினார். மயிலாக அன்னை ஆடி மகிழ்ந்தாள்.  https://www.youtube.com/watch?v=sBBF2v8gxpg
அதை கண்டு கண்ணனும் ஆடத் தொடங்க மகாகவி சுப்ரமணிய பாரதி “சின்னஞ் சிறு கிளியே  “ என்று ராதை கோபியர்களுடன் பரவச லீலையை விவரித்தார். https://www.youtube.com/watch?v=npG_tTbtUAc

அன்னையும் மாமனும் ஆடக் கண்டு மயில்வாகனனும் ஆடத் தொடங்க நமது வித்வானோ “வேல் வேல் வீரமுருகனின் வேல்”  உணர்ச்சியுடன் தன் சொந்த சாகித்தயத்தை பாடினார். https://www.youtube.com/watch?v=hGjlW0DI4PE

ஆடும் கடவுளர் எல்லாம் ஆடிவிட்டனர் , ஆடலரசனை காணோமே  என்று “எப்போ வருவாரோ “ என்று ரசிகர்கள் ஏங்குவதை உணர்ந்தார் போல் உடனே கோபால கிருஷ்ண பாரதியாரை தன் மனதில் ஆசனமிட்டு  “ஜோன்புரி”யில் சஞ்சரித்தார், அப்படியே சுத்தனாந்தத்தில் லயித்து சுத்தானந்த பாரதியாக “தேடி வந்து என்னுடன் ஆடி மகிழ்கிறார் தேவாதி தேவனடி”  என்ற தன் அகத்தில் காண்பதை புறத்தில் தன் ரசிகர்களிடம் விண்டார்.

இது வரை தவத்தில் ஆழ்ந்திருந்த காஞ்சி மாமுனிவர் “ அம்பாள் மேல நான் உனக்கு சொல்லி வச்ச பாட்ட பாடு “ என்று பணித்தார் “ஸ்ரீ சக்கரராஜ சிம்மாசனேஸ்வரி” என்று அகத்தியர் பாட காமாட்சியின் நடனம் துவங்கியது , ஆடிட்டொரியமே கைத்தட்டலால் அதிர்ந்தது. 
https://www.youtube.com/watch?v=24_-83-n7CU

அந்த ராகமாலிகையில் அம்பாளின் ஆட்டம் நிற்காமல் போனாதால் அப்படியே அவள் ஜதிக்கேற்ப தில்லானா ஒன்று “பஸ்ந்த் பஹாரில்” பாடத் துவங்கினார் “கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வமாய் கலி தீர்க்கும் காஞ்சி மாமுனியே” என்று தன் சலிக்கும் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்த அந்த மகராஜன் மன்றாடினார். https://www.youtube.com/watch?v=bl88yWv34-E

நிறுத்த விரும்பாத நிருத்திய நடசனோ தயானந்த சரஸ்வதி சுவாமிகளை அழைத்து தனது களி நடனத்தை பாடச் செய்தார் “ போ சம்போ சிவசம்போ சுவயம்போ” அன்று அந்த மயிலையே கயிலையானது. கங்கை ஆர்பரித்து அனைவரையும் ஆசிர்வதித்தாள். https://www.youtube.com/watch?v=UYFRP0Ki1rw

கலா ரசிகர்கள் கலைய மனமின்றி மூன்று மணி நேர கச்சேரி நாலரை மணி நேரம் போனது தெரியாமல் வீட்டிற்கும் போகும் வழி தெரியாமல் கார்களின் ஜாமில் சிக்கி “திக்கு தெரியாத காட்டில் “ https://www.youtube.com/watch?v=5V4Me6iFj_k தவித்த போது “திருவல்லிக்கேணி போறவாள்ளாம் என்னோட வந்துடுங்கோ பார்த்தசாரதி கோவில் வரைக்கும் வழிக் காட்றேன்” என்று பாரதி பலருக்கும் வழிக் காட்டி கொண்டிருந்தார்.

 இதற்குள் அங்கு கூடியிருந்த கடவுளர்களுக்கும் மகான்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாகிகொண்டிருந்தது.  மகான் இராகவேந்திரர்  “சுவாமிகளே ! இந்த சங்கீதக்காரர் மிகவும் பாவத்துடன் ஆத்மார்த்தமாக அழைப்பதால் இவர் பாடும் எல்லா இடங்களுக்கும் நாம் வரவேண்டியுள்ளது . இவரின் சங்கீதத்தை கேட்டுவிட்டு வேளச்சேரியிலிருந்து ஒரு கறுத்த சிறுவன் மந்தராலயம் வந்து பிருந்தாவனத்தில் துளசி மாடம் எங்கே அந்த பாடலில் சொல்லப்பட்ட புனிதம் எங்கே, துங்கையில் நீர் எங்கே, உங்கள் பிருந்தவனத்தில் கிராணைட் கற்கள் பதிக்க அனுமதிக்கலாமா என்று கேள்வி கேட்கிறான், இப்படியே போனால் மக்கள் இவரின் பாடல்களை கேட்டு புனிதம் அடைந்து கலி முற்ற வாய்பில்லாமல் போகலாம். காளியின் நடனம் நடக்க வேண்டும் என்றால் மக்கள் இன்னும் அந்தகாரத்தின் தீமையை உணரும் சூழ்நிலை வேண்டும். “

“ ஆமாம் நாமும் இந்த தேவலோக கந்தர்வனை பூலோகத்திற்கு அனுப்பி பல வருடங்களாகிவிட்டது. இவரின் இசையை கேட்பதற்கு நாமும் அடிக்கடி பூலோகம் வரவேண்டியுள்ளது.  அதனால் இவரை மீண்டும் அழைத்துக் கொள்வோம்.  அந்தகாரம் மீண்டும் பரவ அந்தக் காரிலேயே இவரின் இந்த பிறவியை முடிவுக் கொண்டு வருவோம். “ என்றார் கிருஷ்ண பரமாத்மா.

“கலியுகத்திற்கு பின் வரப்போகும் யுகத்தில் வாழ சில மானுடர்கள் வேண்டும் அதனால் இவரின் பாடல்கள் கேட்க பார்க்க தொழிற்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள நாம் வரமளிப்போம் “  என்றார் சிவபெருமான்.

கடவுளர்களின் தீர்மானத்தை உணராமல், கச்சேரி மிக அற்புதமாக நடந்ததில் மகிழ்ச்சி அடைந்து தன் சந்தானங்களுடன் அந்த மகாராஜனும்  இடைவிடாது பாடியதால் வந்த பசியை தீர்த்துக் கொள்ள தாசபிரகாஷ் ஹோட்டலுக்கு சுட சுட இட்லி உண்பதற்கு  தன்னுடைய அந்தக் காரை விடச்  சொன்னார்.

பின் குறிப்பு :
28 வருடங்களுக்கு முன்  தன்  உடல் நீத்தாலும் திரு. மகாராஜபுரம் சந்தானம் இன்றும்  என்னைப் போன்ற எண்ணற்ற ரசிகர்களின் மனங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மேலே இருக்கும் படத்தில் சந்தானம் அவர்களின் பத்தை கருப்பு வெள்ளையில் ஒரு நிழல் போல் காட்டிவிட்டு அவர் விரும்பி பாடிய சாகித்தியம் இயற்றியவர்கள் மகான்களின் படங்களை பல  வண்ணத்தில்  போட்டிருப்பது மகாராஜபுரம்  அவர்களின் வெற்றி தத்துவத்தின் வெளிப்பாடாகும். பாடியவர்களின் பாடலின் பாவத்தை ரசிகரின் மனதில் பதிய வைத்து அவர்களை அந்த பாடல் ஆசிரியரின் கால கட்டத்திற்கே கொண்டு சென்றதே அவருக்கு பல ரசிகர்களின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பதின் இரகசியம் ஆகும் .


15 comments:

  1. Very interesting imagination. Very nostalgic

    ReplyDelete
    Replies
    1. It is all started from you. Your inspiration only led to this imagination.

      Delete
  2. Replies
    1. Thank you sir. You are really blessed to be with him and listen to him so closely in a kutcheri and be a part of it. I have heard even politicians talk so great about sir's music. Once when I attended Cho's sir Thuglak meeting in Music Academy and watching the programme from outside on screen. Then the organisers were heard telling this happened only during Maharajapuram's concert.

      Delete
  3. Super Ganesh. Ithay unnudaya inraya programme la pannirunthal nanrairunthirukum with their permission

    ReplyDelete
    Replies
    1. Thank you. If this is the divine will, please do it. I had visited Mantralayam only after hearing "tunga theera virajam", serenity of the divine place can be felt only in Maharajapuram Santhanam sir's voice. Even we came to know some of the Sathya Sai Baba's devotess went on to ask him why this great singer had to leave the earth so early. This is yearning of his millions of admirers of his great music.

      Blessed are those who have lived close to him , performed along with him, his music takes all of us to different divine world.

      Delete
  4. Shows your love for music and Maharajapuram

    ReplyDelete
    Replies
    1. Yes, My love for Carnatic Music started after listening to his music

      Delete
  5. மேதையின் குரலில் உள்ள கனிவும் கம்பீரமும் அவரிடம் கடவுளுக்கு உள்ள வாஞ்சை.ரசிகனும் அது போலவே.

    ReplyDelete
  6. அன்புள்ள அக்கா ! தங்கள் பாணியில் சொல்வதென்றால் "இது ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடே" பலரின் அனுபவங்களும் மற்றும் பாடல்களை கேட்கும் நமக்கு தோன்றும் ஒரு உன்னத பயணத்தின் வெளிப்பாடு இந்த கற்பனை கலந்த கதை.

    ReplyDelete
  7. அவரின் கச்சேரி கேட்டது போல் இருந்தது

    ReplyDelete
  8. அருமை கிருஷ்ணா! சங்கீதம் தெரியாதவர்களும், சங்கீதம் ஏதோ ஒரு சிலரின் ஏக போக உரிமை என்று நினைப்பவர்கள் கூட, உன் எழுத்தைப் பார்த்து, எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
    ஏழு ஸ்வரங்களுக்குள், இந்திரா காலம் புரியும் சங்கீத்த்தின்முதல் ஸ்வரத்தில் தலைப்பு வைத்த உன்னை பாராட்டாமல் இருக்க முடியாது.
    மஹாராஜபுரத்தாரின் கச்சேரி கேட்க தெய்வங்கள் வந்தன. அப்போதே நீ இதை எழுதி இருந்தால்,உன் எழுத்தைப் படித்து விட்டு, இது போல எழுத தனது எல்லாக் கச்சேரிகளுக்கும் உன்னை அழைக்க அவரே வந்திருப்பார்.

    ReplyDelete
  9. ' இந்திரஜாலம், ' 'சங்கீதத்தின் ' என்று திருத்திப் படிக்கவும்

    ReplyDelete
  10. கணபதி வீட்டில், இவர் பாடல்களை நாம் ரசித்துக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  11. கணபதி வீட்டில் இவர் பாடல்களை நாம் ரசித்து கேட்டது நினைவில் ஊர்வலம் வருகிறது.

    ReplyDelete